| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a வாயிற்காவலர் |
| 300 | : | _ _ |a பிற வகை |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a சிவனின் வாயிற்காவலர்களில் ஒருவரான பிரசண்டன் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a வாயிற்காவலர் ஜடாமகுடம் தரித்தவராய், பின்னால் கற்றைக் குழல்கள் இருபுறமும் பரந்திருக்க, நெற்றியில் மணிகளால் ஆன நெற்றிப்பட்டை அணிந்து, கோரப்பற்களை வெளியே நீட்டியவராய், உருட்டிய விழிகளுடனும், நெரித்த புருவங்களுடனும் முன் வலது கையால் எச்சரிக்கை முத்திரை காட்டி மிரள வைக்கிறார். பின் இடது கைகளில் முத்தலை சூலமும், பாசமும் கொண்டு, இடது முன் கையை ஊன்றியுள்ள கதையின் மீது வைத்துள்ளார். பின்புறம் இடைக்கட்டின் முடிச்சுக் காட்டப்பட்டுள்ள நிலையில் அரையாடை அணிந்துள்ள வாயிற் காவலரின் வலது முழங்காலுக்கு கீழே கிண்கிணி என்னும் அணி காட்டப்பட்டுள்ளது. காலில் தண்டையும், காற்சவடி எனப்படும் சிலம்பும் அணிந்துள்ளார். உடலைச் சுற்றி உடைமணி செல்கிறது. இது வீரர்களுக்கே உரித்தான அணியாகும். கழுத்தில் அரும்புச்சரம், நீண்ட ஆரம், மார்பில் சன்னவீரம், வயிற்றில் உதரபந்தம், தோள்களில் தோள் மாலை, கைகளில தோள் வளை, முன் வளை, விரல்களில் நடுவிரல் தவிர பிறவற்றில் வளையங்கள் அணிந்துள்ளார். இடது காலை ஊன்றி வலது காலை குறுக்காக ஊன்றிய கதையின் தலைப்பகுதியில் வைத்துள்ளார். கதையின் அருகில நாகம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a வாயிற்காவலர், துவார பாலகர்,பிரசண்டன், சிவன் கோயில் காவலர்கள், குன்னாண்டார் கோயில், குன்றக்குடி, குன்றக்குடித் தேவர், குன்றக்குடி நாயனார், குன்றப்பெருமாள், குன்றாண்டார், புதுக்கோட்டை குடைவரைகள், சிவன் குடைவரை, கீரனூர் குடைவரைகள், குன்னாண்டார் கோயில் சிற்பங்கள், சிவன் கோயில் சிற்பங்கள், சிவத்தலங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a குன்னாண்டார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c குன்னாண்டார் கோயில் |d புதுக்கோட்டை |f கீரனூர் |
| 905 | : | _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
| 914 | : | _ _ |a 10.58168901 |
| 915 | : | _ _ |a 78.89790773 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000402 |
| barcode | : | TVA_SCL_000402 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |